Saturday, September 20, 2008

முத்துப்பேட்டை காவல்துறையே நடத்திய கலவரம்

தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் முத்துப் பேட்டை பலமுறை பாதிக்கப் பட்டுள்ளது. பதற்றத்திற்குள் ளாகியுள்ளது.

இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத் தின் நோக்கமே முஸ்லிம் பகுதி களை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங் களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான் மையாக வாழும் பகுதிகளில், ஆபாச மாகவும், வெறித்தன மாகவும் கோஷ மிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டை களை அடிப்பது, பட்டாசுகளை வெடிப் பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.
`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளை களே பாகிஸ்தானுக்கு ஓடுங் களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.

மேற்கண்ட சம்பவங்களைக் காலங் காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறு மையின் விளிம்புக்கே போன முத்துப் பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முர மாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடி யுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008WP) கூறுகிறது.

ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதி யைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப் பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு (எ) முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல் படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்ற னர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக் களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட் டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறி யுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.
ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தி யுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.
சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாச லுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள் ளுங்கள்என்று முஸ்லிம்களுக் குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்’ என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.
காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.
எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடு மையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப் பேட்டையில் காவல்துறை மிகச் சிறப் பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.
பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக் குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களை யெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந் துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத் திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.

Sunday, September 14, 2008

ஒரிசா படுகொலைகளை நியாயப்படுத்தும் ராமகோபாலன்

ஒரிசாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை ரணமாக்கி, கன்னி யாஸ்திரிகளை மானபங்கம் செய்து, எரித்துக்கொன்று வெறியாட்டம் நடத்தி வரும் சங்பரிவார அராஜகங்களை வலி மையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளார் தமிழகத்தின் பயங்கரவாதி ராமகோபால அய்யர்.
“ஒரிசா மாநிலத்தை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து கொட்டி மதம் மாற்ற முயற்சித்தனர். அதைத் தடுத்து நிறுத்திய வர் சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி. அவருக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப் படவில்லை.
தங்களது உயிருக்குயிரான சுவாமி கள் படுகொலை செய்யப்பட்டவுடன் மலைவாழ் மக்களால் ஆத்திரத்தையும், கோபத்தையும், எரிச்சலையும் கட்டுப் படுத்த முடியவில்லை. சுவாமிகளை சதிசெய்து கொல்ல காரணமானவர்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு மறைவிட மும் பாதுகாப்பும் உதவியும் செய்த சர்ச்சுகளைத் தாக்கினார்கள்.’’- என்று தன் ரத்தத்தில் கலந்தோடும் விஷத்தை வார்த்தைகளால் வாந்தி யெடுத்துள்ளார் ராமகோபால அய்யர்.
85 வயது சுவாமிகளை சதிசெய்து கொல்லக் காரணமானவர்களைத்தான் மலைவாழ்(?) மக்கள் தாக்கினார்களாம்.
சதிகாரர்களுக்கு மறைவிடமாக சர்ச்சுகள் இருப்பதால்தான் கொளுத்து கிறார்களாம். பயங்கரவாதத்திற்கு பலியான மக்களையே பயங்கரவாதி களாக சித்தரித்து அறிக்கை விடுகிறார் மறைகழண்ட பயங்கரவாதி ராமகோபாலன்.
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் ஒருநாள் விடுமுறை அறிவித்ததை `பிளாக் மெயில்’ நடவடிக்கை என்கிறார் இந்தப் பேர்வழி. ஏற்கனவே, கன்னியாஸ் திரிகள் மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை `தேசபக்த நடவடிக்கை’ என்றார் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால். மாட்டுத் தோலை கையில் வைத்திருந்ததற்காக ஹரியானா வில் தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை வி.எச்.பி. நியாயப்படுத் தியது. ஒரிசா கிறிஸ்தவர்கள் படுகொலையை ராம கோபாலன் நியாயப்படுத்துகிறார்.
மனிதநேயர்கள் என்ன செய்ய முடியும்? இவர்களைக் காறித் துப்புவதைத் தவிர...

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!

மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

Saturday, September 6, 2008

முகம்மது நபியை அவமதித்த தினமலர் தமிழக மெங்கும் கண்டன எதிர்ப்பு குரல்கள்

இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. இதை பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் திரும்பத் திரும்ப மறுபிரசுரம் செய்யப்பட்டன.

இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர மற்றவற்றை வணங்குவதையும், மனிதர்களை கடவுளாக்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆகவே வழிபாட்டிற்கோ அல்லது தூதர்கள் மற்றும் அன்னாரின் நேசர்களுக்கோ உருவம் கொடுப்பதையும், அது மரியாதை நிமிர்த்தமாகவே இருந்தாலும், பிற்காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுளுக்கு உருவம் இல்லை என்ற நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதால் சிலை வடிப்பதையும், சித்திரங்கள் தீட்டுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.

இதனால் தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதால் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். தங்களின் எதிர்ப்புகளை ஆரோக்கியமான முறையில் முஸ்லிம்கள் பதிவு செய்தனர். தமுமுகவும் சென்னை உட்பட தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகிறது கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முகமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 நேற்று இதழில் பிரசுரித்திருந்தார்கள்.

தினமலரின் இந்த விஷமத்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. இவ்வாறு வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் , விஷமத்தனமாக இதனை செய்துள்ளது தினமலர்.

காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லச் சொன்னார்கள். பதிலுக்கு முற்றுகையிட்ட முஸ்லிம்கள் தினமலர் ஆசிரியரைக் கைது செய்தால் மட்டுமே இவ்விடத்தில் இருந்து அகலுவதாய் கூறினர்.
முற்றுகையிட்டோர் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டி.ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று திலிபன் என்கிற ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். முஸ்லிம்கள் தரப்பில் 60 பேரைக் கைது செய்த போலீஸார் அன்று இரவே விடுதலையும் செய்தனர்.

முற்றுகையிட்ட முஸ்லிம்களை கட்டுக்குள் கொண்டு வர வேலூர் மாவட்டத் தலைவர் எஸ். தஸ்தகீர், மாவட்டச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாவட்டப் பொருளாளர் ஏஜாஸ் அஹமது, ஊலமா அணிச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி, மாவட்டத் துணைச் செயலாளர் ரஹ்மான் செரிப், நஜிர், முகம்மது அலி ஆகியோர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும் பாடு பட்டனர்.

அதேப் போல திருவண்ணாமலை செங்கம், சேலம், ஆம்பூர், ஓசூர் என பரவலாக நேற்று தினமலருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பல இடங்களில் கடை அடைப்புகளையும் செய்து முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் பரவலாக தமிழகமெங்கும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.