Friday, August 29, 2008

மாண்பிழக்கலாமா மத்திய அமைச்சர்?

உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் ஆண், பெண் என நேர் எதிர் இனங்களாகப் பார்க்கப்பட்டுள்ளன. உடல் அமைப்பின் ஒன்றோ டொன்று பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உயிரினங்கள் அனைத்தும் இந்த இயற்கை அடிப்படையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த இணைவு நிறுத்தப்பட்டால் பூமியில் வெறும் 100 ஆண்டுகளில் மனித இனம் அழிந்து விடும். ஓர் அருவி வீழ்கிறபோது நதியிலும் கலக்கலாம், சாக்கடையிலும் கலக்கலாம். ஆனால் எந்தக் 'கலப்பு' மக்கள் சமூகத்துக்கு நன்மையாக விளையும் என்பதே முக்கியம்.தற்போது, ஓரின சேர்க்கைக்கும் கூட ஆதரவுக்குரல் எழுந்து வருகிறது. சுமார் 20 ஆண்டு களுக்கு முன்னர், இந்த ஈனச்செயலை வெளியில் கூறவே அசிங்கப் படுவார்கள். அதில் ஈடுபடும் நபர்கள், சமூகத்தில் நடத்தைக் கெட்டவராக சித்தரிக்கப்பட்டார்கள். மேலும் இத்தகைய ஜென்மங்கள் அரிதாகவே இருந்து வந்தனர்.இன்று, இந்தக் கேவலத்திற்கு ஆதரவு திரட்டுவோர் படித்த அறிவாளி(?)களாகவும், மக்கள் மத்தியில் அறியப்பட்ட பிரபலங்களாகவும் இருப்பது அதிர்ச்சி யாக உள்ளது. குறிப்பாக தற்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வெளிப்படை யாகவே ஓரின சேர்க்கையை ஆதரித்துப் பேச ஆரம்பித்து விட்டார். ஓரினச் சேர்க்கைக்கு உள்ள சட்டரீதியான தடையை நீக்க வேண்டும் எனறு குரல் கொடுக்கிறார். நல்லவேளை இவர் சட்டத்துறை அமைச்சராக இல்லை.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்தான் ஆண்லி ஆண், பெண்லிபெண் இடையே நடக்கும் ஓரினச் சேர்க்கை இருந்து வந்தது. இதற்குக் காரணம் அந்நாடுகளில் வாழும் பெரும்பான்மையோர் 'ஒழுக்கம்' பேணுவ தில்லை. பலர் கடவுள் மறுப்புக் கொள்கை, சமய நம்பிக்கை மறுப்பு உடையவர்கள். கிருத்தவர்களும் வேதத்தை பின்பற்றத் தேவையில்லை, அப்படியே செயல்படுத்தவும் தேவையில்லை. பூமியில் செய்யும் பாவங்களுக்கு கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கை ஒன்றே போதுமானது என்று நினைப்பதால் இது போன்ற செயல்கள் அவர்களுக்கு குற்றமாகத் தெரிவ தில்லை.மேற்கத்திய நாடுகளில் குடும்ப வாழ்க்கையின் மீதான மதிப்பீடுகள் அழிந்து போனதற்கு இந்த ஓரினச் சேர்க்கை செயலும் ஓர் காரணம். திருமணத்திற்கு முன்பே, 13 வயதில் இருந்தே அவர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் வந்து விடுவதால் சமூக மதிப்புக்காகவும், வாரிசுக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படாமல் போகிறது. 20 ஆண்டுகட்டு முன்னர் தமிழகத்தில் தினசரி பத்திரிக்கைகளில் அமெரிக்காவில் நடந்ததாக சில செய்திகள் இடம்பெறும். பிரபல நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இந்தப் பட்டியலில் குற்றம்சாட்டப்பட்டார்கள். பின்னர் இங்கும் இதுபற்றிய பேச்சுக்கள் புழங்கத் தொடங்கின. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு சேர்க்கும் நிகழ்வுகள் மெல்ல மெல்ல ஊடுருவி மக்களின் உணர்வுகளை அதற்குத் தோதாக பக்குவப்படுத்தினர் என்றே கூற வேண்டும்.
ஓரினச் சேர்க்கையால் திருமணத்திற்கு முன்பே சக்தி இழந்துவிடுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் வர இந்த ஓரினச் சேர்க்கையும் காரணமாகிறது.இத்தகைய செயலில் சக்தியை இழந்து விடும் ஆண்களின் குடும்பங்களில்தான் கள்ளக்காதல் கலகங்கள் ஏற்படுகின்றன. இன்று அதற்கு சட்ட ரீதியான அனுமதிக்கு ஒரு மத்திய அமைச்சரே கோரிக்கை வைப்பது அவமானகரமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பிரதமரோ, வேறு அமைச்சர் களோ, ஏன் அன்புமணி ராமதாஸின் தந்தையான மருத்துவர் ராமதாúஸா இதனைக் கண்டிக்கவில்லை. தமிழக முதல்வரும் மௌனம் காக்கிறார். இது உண்மையில் இந்த சமூகத்தை ஆண்மையற்ற சமூகமாக்கும் திட்டம்தான். ஓரினச் சேர்க்கை குறித்து திருமறையில் இறைவன் கண்டிக்கிறான். லூத் என்ற இறைத்தூதரின் சமுதாயத் தினர் இச்செயலை செய்த போது, இறைவன் அவர்களை அழித்து விட்டதாக கூறுகிறான்.சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபடுவோருக்கு இவ்வுலகில் பல துன்பங்களும் அழிவுகளும் ஏற்படு வதோடு நாளை மறுமையிலும் கடும் தண்டனைக் கிடைக்கும். இதற்காகவே நமக்கு முன் வாழ்ந்த சமுதாயமான லூத் (அலை) அவர்களின் சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட போது அச்சமுதாயம் அழிந்ததை திருக்குர்ஆன் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.''நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக (தலைகீழாக) ஆக்கிவிட்டோம்; அன்றியும் (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம். ஆகவே, (பொழியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றும்) உம் இரட்சகனால் அடையாளமிடப்பட்டதாக இருந்தது. (புரட்டப்பட்ட) அ(வ்வூரான)து இந்த அநியாயக் காரர்களுக்கு வெகுதூரமானது அல்ல.''(அல்குர்ஆன் 11:82,83)

சோர்ஸ்:TMMK

Saturday, August 23, 2008

சமூக நல்லிணகத்தை கெடுக்கும் இந்தியா டுடே


'சுரணையற்ற இந்தியா'இந்தியாவின் இறையாண்மையை இதைவிட அவமான கரமான வார்த்தை களால் யாரும் திட்ட முடியாது. பிரமாண்டமான பத்திரிக்கை பலம், ஆதிக்க சாதி என்னும் தேசிய அடை யாளம், இந்தியா டுடேவால் தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்பட்ட வாசகர் வட்டம் என்ற ரசிகர் கூட்டத்தின் பேராதரவு எல்லாம் ஒருங்கிணைந்து, தரம் கெட்ட வார்த்தையில் சொந்த தேசத்தின் தன்மானத்தை சொறிந்து பார்க்கும் தைரியத்தை இந்தியா டுடேவுக்கு தந்திருக்கிறது.இந்தியாவில் என்றில்லை, உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கு ஒரு முஸ்லிம் தான் காரணமாக இருப்பான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படி எழுதுவதற்கு இந்தியா டுடேவுக்கு முஸ்லிம்கள் மீது என்ன ஆத்திரம் வந்தது என்று பலர் நினைக்கக் கூடும்.இஸ்லாம், முஸ்லிம், மதச்சார்பின்மை, இந்திய ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமை, சமய, சமூக சகிப்புத் தன்மை என்ற தேசிய இறையாண்மையின் உட்கூறு களை உடைத்து நொறுக்கி, தாங்கள் கொண்டு வர விரும்பும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியலை மக்கள் மனதில் திணிப்பதே அவர்கள் பத்திரிக்கை பணிகளின் நோக்கம். இந்த இலக்கோடு அ(வ்)வாள்கள் பல பத்திரிக்கைகளை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.இந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட மற்றுமொரு நாசகார வடிவம்தான் 'இந்தியா டுடே'.கணிசமான அளவு சமஸ்கிருதம் உள்ளிட்ட வட மொழி சொற்களை சிறுக சிறுக திணித்து எழுதுவது இந்தியா டுடேயின் எழுதப்படாத தீர்மானமாக இருப்பதைக் காணலாம். முஸ்லிம் விரோத மன நிலை (ஙண்ய்க் நங்ற்) கொண்ட பார்ப்பனிய பித்து பிடித்த எழுத்தாளர் களை பொறுக்கிக் கொண்டு வந்து எழுத வைப்பது அதன் பணி.முஸ்லிம்கள் சும்மா இருந்தால் இந்தியா டுடேவுக்கு எரிச்சலாக இருக்கும். ஏதாவது சில முஸ்லிம்கள் எங்காவது ஒரு பிழையைச் செய்ய வேண்டும். உடனே முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்து. முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள், நாட்டுக்கு பாதுகாப்பில்லை, உயிர்களுக்கு உத்திரவாதமில்லை என்று கட்டுரைகளை எழுதி குவிக்கும்.பாதிக்கப்படும் நபர்களின் புகைப்படங் களை வண்ணங்களில் இட்டு இதற்கு முஸ்லிம்தான் காரணம் என்று உடனே எழுதுவது அதன் கலவர உத்தி. கோபம் உச்சந்தலைக்கு எகிறி பிற சமயத்தினர் பெரும் கோபத்துடன் முஸ்லிம்களை தாக்க வேண்டும். குஜராத்களை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அதன் எழுத்துத் திட்டம். அந்த இலக்கை எட்டும் வரை இந்தியா டுடே எழுதிக் கொண்டே இருக்கும்.ஒரு சம்பவம் நடந்ததுடன் அது குறித்து விசாரணை செய்ய காவல் துறையும், நீதி செலுத்த நீதிமன்றங்களும் உள்ளன. யாரும் கைது செய்யப்பட வில்லை. அத்தகைய நிலையிலேயே ஊடகங்கள் முஸ்லிம்களில் குற்றவாளி களைத் தேடுகின்றன. குண்டுகள் வெடிக்கும் சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு மின் அஞ்சல் இதற்கு பொறுப்பேற்கிறது. புதுப் பெயரில் ஒரு இயக்கமும் சொல்லப் படுகிறது. அதை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் குண்டு வைத்தார்கள் என்கின்றனர். இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் ஒரு இலிமெயில் அஹமதாபாத் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்பதாக இந்தியா டுடே எழுதுகிறது. அந்த இலிமெயில் ஆய்வு செய்யப்பட்டதில் அதன் சங்கிலித் தொடர் ஒரு அமெரிக்கனின் கம்ப்யூட்ட ரில் சென்று முடிகிறது என கூறப்பட்டது. பின்னர் அது குறித்து எந்த தகவலும் இல்லை.இதிலிருந்து, இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு, முஸ்லிம்கள் தலையில் பொறுப்பை சுமத்தும் சதி இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் செய்யப்படுவதை அறிய முடிகிறது. ஆக, அரபு எழுத்துக்களோடு அனுப் பப்பட்ட அந்த இலிமெயில் ஒரு முஸ்லிம் இடத்தில் இருந்து வரவில்லை என்பதை உளவுத்துறையும் அரசும் உணர்ந்து கொண்டது. அதுவே ஒரு முஸ்லிமின் கம்ப்யூட்டரில் முடிந்திருந் தால் அவனை பிடித்துக் கொண்டு வர இன்டர் போல் உதவி தேடப்பட்டிருக் கும். ஆக, அகமதாபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்திய முதல் கூறான இலிமெயில் அக்குற்றச்சாட்டில் இருந்து முஸ்லிம் களை விடுவிக்கிறது. ஆனால், எந்த அடிப்படை ஆதாரமுமின்றி தியோபந்தி (தேவ்பந்த்) மதரஸாவின் மௌலவி அப்துல் ஹலீமை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த கைது ஏதோ ஒருவகையில் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு முஸ்லிம் சமூகத்தை தொடர்புபடுத்த உதவுகிறது. அப்துல் ஹலீம் சில நாட்கள் அல்லது சில மாதங்கள் விசாரணைக்குப் பின்னர், சம்பவத்தில் தொடர்பற்றவர் என விடப்படலாம். அது இந்தியா டுடேயில் மற்றும் அதன் கொள்கை வழி இதழ்களில் வெளிவராது. ஆனால் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பை முஸ்லிம்கள் சுமக்க இந்த கைது குஜராத் அரசுக்கு தேவைப் படுகிறது. ஆனால் மிக சமீபகாலமாக, உத்திரப் பிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் மதரஸா, பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற முழக்கம் பேசப்பட்டது. இந்தியாவில், அரசு, சட்டம், அரசு துறைகள் சார்ந்து மிக அதிகமான தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடியவர்கள் முஸ்லிம் சமூகத்தினர். அடிப்பட்டவர்கள் ஒன்று கூடி, நாங்கள் திருப்பி அடிப்பவர்கள் அல்ல என்று அடித்தவனிடம் முறையிடுவதை போன்றதாகவே அந்த மாநாடு இருந்து, முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அரசு பயங்கரவாதம் பற்றி அம்மாநாடு வாய் திறக்கவில்லை என்றபோதும் தேவ்பந்த் மதரஸா மௌலவி ஒருவர் கட்டம் கட்டப்பட்டி ருக்கிறார். இது இந்திய மதரஸாக்கள், அதன் பாடத் திட்டங்கள், ஆசிரியர்கள் மீது பயங்கரவாத முத்திரையை சுமத்தும் ஒரு ரகசிய நடவடிக்கை தான். இந்த கைதை இந்தியா டுடே நியாயப் படுத்தியுள்ளது. இந்திய பயங்கரவாதத் திற்கும் சர்வதேச பயங்கரவாதத்துக்கும் காரணம் என நிரூபிக்க இந்தியா டுடே அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.தேசத்தினுடைய வெட்கக் கேட்டின் ஒட்டு மொத்த உருவமாக மத்திய உள்துறை அமைச்சரை உருவகப் படுத்திவிட முடியாது என்று எஸ். பிரசன்னராஜன் என்ற கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பாஜக ஆட்சியில், கந்தகார் விமானத்தை பயணிகளுடன் மீட்க, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பயங்கரவாதிகள் என்று சொல்லப்படும் மூன்று பேரை பத்திரமாக காபூலில் கொண்டு போய் விட்டு வந்த செயலைக் குறிப்பிட இதைவிடக் கொச்சையான வார்த்தைகள் தேவைப்படும். ஆனால் இந்தியா டுடே வாய் திறக்கவில்லை. சிவராஜ் பாட்டீலை, பழுதுகளின் அறிகுறி என்கிறது இந்தியா டுடே.இந்தியா டுடே தனது கருத்துகளில் என்ன சொல்ல வருகிறது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்க வில்லை. குறிப்பிட்டபடி ஒரு முஸ்லிம் அமைப்பையோ தனி நபர்களையோ தாக்கவில்லை. ஆனால் இன்னும் ஏன் இந்தியா முழுமைக்கும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்ற கேள்வியை தனது வரிகள் ஒவ்வொன்றிலும் பதிந்து வைக்கிறது. முஸ்லிம்கள் மீது வரைமுறையற்ற தாக்குதல் தொடுக்க சட்டத்திற்கு கூடுதல் அதிகாரம் தரும்படி இந்தியா டுடே வலியுறுத்துகிறது.2004ல், 'திட்டமிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்' குஜராத்தில் இயற்றப் பட்டும், 2006ல் இதே போன்ற சட்ட மசோதவிற்கும் ஒப்புதல் கேட்டு அனுப்பப்பட்டவைகள், நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காமல் அப்படியே கிடக்கின்றன. 2001ல் ஆந்திர சட்ட மன்றத்திலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம் 2006 முதல் மத்திய அரசின் அனுமதிக்காக காத்து கிடக்கிறது. இதேபோல உ.பியும், மத்திய பிரதேசமும் திட்டமிட்ட குற்றங்களுக்கான சட்டங்கள் இயற்றி மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசுகள் கிரிமினல் சட்டங்களை அமுல் படுத்த முடியாது. ஆந்திரம், உ.பி நீங்கலாக குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மூன்றும் பாஜக ஆளும் மாநிலங்கள், மாஃபியாக்களை ஒடுக்க மாயாவதிக்கும், நக்ஸல்களை ஒடுக்க ஆந்திராவுக்கும் புதிய வலுவான கிரிமினல் சட்டங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை ஒடுக்க மத்திய அரசின் அனுமதி அவசியப்படுகிறது. சட்டங்களுக்கான அனுமதியை துரிதப் படுத்த, செயற்கையாக இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிராகரிக்கப்படக் கூடியதாக இல்லை. காரணம் நரேந்திர மோடிக்கும் குஜராத் அரசுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக் கொள்ள அதன் காவல்துறைக்கு செயற்கையான கபட தாக்குதல் (ஊய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ்?) தேவைப்பட்ட போது அதற்காக சொரப்தீன் என்ற முஸ்லிமை பயங்கர வாதத்தின் இஸ்லாமிய முகவரியாக காட்டவில்லையா? பின்னர் ஒரு மறைமுகமான உயர்மட்ட விசாரணை யில், வன்சரா என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தீட்டிய சதிதிட்டம் அது என்பது புலனானது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வன்சரா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கபட தாக்குதலில் ராஜஸ்தான், மற்றும் ஆந்திர காவல்துறைக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்படவில்லயா? சொரப்தீனை பயங்கரவாதியாக பாத்திரம் படைத்த இந்தியா டுடே போன்ற மனோ வியாதிகள் வன்சராக்களை முஸ்லிம் களுக்கு எதிரான பயங்கரவாதிகள் என்று எழுதவில்லை.வன்சராவின் பராக்கிரமங்கள் பற்றி இந்தியாடுடே 'சுதேசி ஜிஹாத்' என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிடுகிறது.சமூகத்தை நோகடிக்காமல் எப்படி பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது என்பது தான் சட்டத்தை அமுல் படுத்து:ம அதிகாரிகள் முன் உள்ள சவால் என்கிறது. இந்தியா டுடே. அதே நேரம் பயங்கரவாதிகளை தேடுகிறேன் பேர்வழி என்று வன்சரா சமூகத்தை சிண்டியிருப்பதையும் தன்னிலை மறந்து குறிப்பிடுகிறது.டி.ஐ.ஜி., வன்சரா வஹாபிகளுக்கு நேரடியாகச் சொன்னால் முஸ்லிம் களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி னார். பயங்கரவாத எதிர்ப்பு படையின் பொறுப்பு வகித்தார். சொரப்தீன் கபட தாக்குதல் வழக்கில் ஜூன் 2007ல் இவர் கைது செய்யப்பட்ட போது இந்த முயற்சிகள் தடைப்பட்டன. வன்சராவின் சட்ட விரோத செயல்களை சர்ச்சைக் குரிய வழி என்று இந்தியாடுடே மெச்சுகிறது. முஸ்லிம் சமுதாயத்துக் குள்ளே, அச்சமூகத்தின் மிதவாத சக்திகளை ஊடுருவவிட்டு உளவு பார்ப்பது ஒரு வழியா? தனக்கு வேண்டாதவனையும் ஒழித்துக் கட்ட விரும்புபவனையும் தான் ஒன்றும் செய்ய வேண்டாம், டி.ஐ.ஜி வன்சராவிடம் சொன்னால் போதும், அவர் கதையை முடித்து விடுவார். இது சட்டவிரோத செயல். இதனை சர்ச்சைக்குரிய வழி என்கிறது இந்தியா டுடே. வன்சராவின் மற்றுமொரு சர்ச்சைக் குரிய வழியா தெனில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பின் வன்சராவின் வன்முறைக்கும் பயந்து தலைமறைவாக இருப்பவர்களின் உறவினர்களை தனது சொந்த பாதுகாப்பில் வைத்துக் கொள் வாராம். குற்றம் சாட்டப்பட்டவர் கள். போலிஸில் ஆஜராகும் வரை உறவினர் கள் (ஆண், பெண் என்று யாராக இருந்தாலும்) இவரது கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்கிறது இந்தியா டுடே. இது சட்டவிரோதமாக இருந்தாலும் மதவாத இஸ்லாமிய சக்திகளை இறுக்கிப் பிடிக்க இந்த வழி உதவியதாம். அதாவது, இஸ்லாத்தை அழிக்க முஸ்லிம்களை ஒடுக்க தயாராகி வரும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு அவர் விருப்பம் போல் செயல்பட அனுமதித்து விடு. சட்டங் களுக்கும், வரைமுறைகளுக்கும் அங்கு வேலை இல்லை என்கிறது இந்தியா டுடே. அஹமதாபாத்தில் குண்டு வெடித்த சில நிமிடங்களில் கைதான அப்துல் ஹலீமின் நிலையை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியா டுடே என்ன சொல்ல வருகிறது என்பது புரியும். இது குண்டு வெடிப்புக்கு அல்லது வைப்புக்கு முந்திய சதி ஆலோசனை யில், சம்பவத்தின் பின்னாளில் அதனை எப்படி எழுத வேண்டும் என்று கருத்து பயங்கரவாத விவாதத்தில் இந்தியா டுடே குழுவும் கலந்துகொண்டு திரும்பி யிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.கோத்ரா ரயில் எரிந்த போது அதை முஸ்லிம்கள் தான் எரித்தனர் என்று இந்தியா டுடேயும் வாய்விட்டு அலறியது. லல்லு பிரசாத் பின்னர் மேற்கொண்ட துறை ரீதியிலான விசாரணையும், தடய அறிவியல் ஆய்வும், முஸ்லிம்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது. அதற்கே இன்னும் இந்தியா டுடே மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், தாங்களே மனோ இச்சைப் படி உருவாக்கிய மாநில சட்டங்களை கொண்டு வன்சராக்களை ஏவி முஸ்லிம் களை கொடுமைப்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அது இன்னும் கிடைக்காத நிலையில், அனுமதிக்கான நெருக்கடியை நோக்கி மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய ஏன் இந்த குண்டு வெடிப்புகள் செயற்கையாக செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற கேள்விக்கு இந்தியா டுடே பதில் தர வேண்டும்.வன்சராவின் செயல்பாடுகள் முஸ்லிம்களை துன்புறுத்துவதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது ஆனால் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க இவையெல்லாம் தேவையான நடவ டிக்கை என்று போலிஸ் அதிகாரிகள் சொல்கிறார்களாம். இந்தியா டுடே சொல்லவில்லையாம். இந்தியா டுடே அலுவலகத்துக்கு போனில் சொல்லி இருப்பார்கள் போலும்.சரி, வன்சராக்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில் யார் யாரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். மேலும் வன்ôரா வகையறாக்களுக்கும் இந்தியா டுடே வகையறாக்களுக்கும் அடிப்படை யில் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது ஒன்றுதானே நோக்கம்.ஒரு போலிஸ் அதிகாரி சொல்கிறா ராம். இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து வலை மிகப்பெரியதாக விரிக்கப்பட வேண்டும். அப்படி ஏராளமான மீன்கள் மாட்டும் போது, தேவையான மீன்களை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை விட்டு விடலாம் என்று சொன்னாராம். அதாவது பாருங்கள், இந்தியாவில் சகோதர மனப்பான்மையுடன் வாழ விரும்பும் முஸ்லிம்கள் பற்றி இந்தியா டுடேலியோ அல்லது இந்தியா டுடே குறிப்பிடுவது போன்ற காவல்துறை அதிகாரிகளே வைத்திருக்கும் அபிமா னத்தை. முஸ்லிம் களை மனிதர்களாகப் பார்க்கக்கூட அவர்களால் இயலவில்லை. சென்று திரும்பும் இடம் தெரியாத மீன் போன்ற அற்ப உயிரினங்களுக்கு ஒப்பாக மதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை இந்த உதாரணம் கூட, இதனை வாசிக்கும் முஸ்லிம் இளைஞ னின் ரத்தத்தை சூடாக்கி, அவனுடைய ஆதங்கக் குரலைக் கூட பயங்கரவாத ஓசை என்று லபக் என பிடித்து நீதிமன்றத்திலும் பெரும்பான்மையினரின் மனசாட்சியை திருப்திப்படுத்த நினைக் கும் நீதிபதிகளைக் கொண்டு வந்து, அவனை பின்னர் தூக்கு மேடையிலும் நிறுத்தி விடலாம் என்று நினைத்து இப்படிப்பட்ட அற்பமான உதாரணங் களை குறிப்பிடுகிறார்களோ? இந்த தருணங்களில்தான் பெரியாரின் சில பொன்மொழிகளை நாமும் நினைவு றுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.பயங்கரவாதத்தை ஒடுக்கக்கூடாது என்று கூறவில்லை; ஏதும் அறியாத அப்பாவிகளை சாலை நெடுகிலும் மருத்துவமனைகளிலும், அலுவலகம், பள்ளிக்கூடங்களிலும் இரக்கமின்றி கொன்று ஒழிக்கும் கடின மனம் படைத்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த மதத்தில், எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும் சரியே. ஆனால் அத்தகைய கடின சிந்தை உடையோர் தோன்றாமல் இருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் ஒரு நல்ல அரசு சிந்திக்க வேண்டும். ஆனால் பாஜக அரசுகளிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. நரேந்திர மோடிகள் மீண்டும் மீண்டும் முதல்வரா வதை தடுக்கும் சட்டம் வழிகளை ஆராய வேண்டும். அத்வானி போன்ற வர்களை பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கிலும், பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, அசோக் சிங்கால், உமாபாரதி மற்றும் சூலாயுதத்தோடு சபதம் போடும் வி.எச்.பி தலைவர் பிரவீண் தொகாடியாவையும் சிறையில் போட வழிவகை செய்யும் சட்டம் எதுவென விரைந்து நிறைவேற்ற வேண்டும். அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெடிகுண்டு நிஜங் களும், புரளிகளும் கிளப்பி விடும் அரசியல் நபர்களை களையெடுக்கவும், அப்பாவிகளை சிறையிலிடும், சுட்டுக் கொல்லும் வன்சராக்கள் போன்ற சட்டத்தை மீறும் காவல்துறை கயமை களை தண்டனையுடன் சிறையிலிடவும் போதுமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டமிட்டு மனித உளவுக்கு ஆள் எடுக்கத் தூண்டும் பாஜக ஆர்.எஸ்.எஸ். ஸின் ஊது குழல்களாக உள்ள இந்தியா டுடேக்களையும் தினமலரையும் மூடிவிட சட்டம் வேண்டும்.அத்துடன், குண்டுகளை அடுக்கி வைத்து குலைகுலையாக கொலை செய்யும் கொடும் பயங்கரவாதிகளை அடிவேரோடு அழிக்கும் சட்டங்களை அதே கையோடு நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் பேரவா.


source :TMMK

Wednesday, August 20, 2008

அமர்நாத் விவகாரம் காஷ்மீரிகளின் நிலை என்ன?


நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதன் இறுதிக் கட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. எர்ரன் நாயுடு (தெலுங்கு தேசம்) அஸதுதீன் உவைஸி (எம்.ஐ.எம்.) உமர் அப்துல்லாஹ் (தேசிய மாநாடு) ஆகியோர் அவையின் கவனத்தை தங்கள் சூடான வாதங்களால் ஈர்த்தனர்.
காஷ்மீரில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும் என உமர் அப்துல்லாஹ் உறுமியபோது நாடாளுமன்றமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. காஷ்மீரின் பண்பாட்டை அவர் உறுதிப்படுத்தி மீண்டும் தங்கள் பாரம்பர்யத்தை நினைவூட்டினார்.
ஆனால், காஷ்மீர் இன்று அனலில் தகிக்கிறது. பாதுகாப்பு (?) படைகள் சுட்டதில் ஹூரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உட்பட 17 பேர் உயிர் துறந்துள்ளனர். இந்துக்கள் கணிசமாக வசிக்கும் ஜம்முவில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான 'அமர்நாத் யாத்ரா சங்கர் சமிதி' திட்டமிட்டு வன்முறையை ஊக்குவித்து வருகிறது.
முஸ்லிம்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் காஷ்மீர் பள்ளத் தாக்கில் எதிரும் புதிருமான தலைவர் களும், மக்களும் ஓரணியில் திரண்டுள்ள னர். மிதவாதி என கருதப்படும் மீர்வாய்ஸ் உமர் பாரூக்கும், தீவிரப் போக்குடையவர் என கூறப்படும் கிலானியும் கரம் கோர்த்திருப்பதும், இவர்களுக்கு முப்தி முஹம்மதுலிவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஷேக் அப்துல்லாஹ்வின் தேசிய மாநாடு கட்சியும் ஆதரவளிப்பது போன்ற சூழலும் காஷ்மீர் அரசியலில் முக்கியத் துவமான கட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.
ஜம்முலிகாஷ்மீரில் அப்படி என்னதான் பிரச்சினை?
அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் எதிர்க்கிறார்களா? என்றால், இல்லை. மாறாக, தங்களில் மிச்சமிருக்கும் ஒரே சிறப்பு அம்ச உரிமையான இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 370வது சட்டப் பிரிவுக்கு ஆபத்து வருமோ? என்ற அச்சம்தான் பிரச்சினை யின் ஆரம்ப புள்ளியாகும்.
காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க இச்சட்டப்பிரிவு தடை விதிக்கிறது. காரணம், பாலஸ் தீனத்தில் நிலத்தை விலைகொடுத்து வாங்கி, யூதர்கள் தனி நாட்டை உருவாக்கி, பாலஸ்தீனர்களை விரட்டியடித்தது போன்ற நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீரிகளின் கோரிக்கையை இந்தியா ஏற்றது.
முன்பு காஷ்மீரிக்கு இருந்த தனி பிரதமர், தனி கொடி போன்ற சிறப்பம் சங்கள் பின்னாளில் படிப்படியாக பறிக்கப்பட்டது. அதை எதிர்த்ததால் தான் 'காஷ்மீர் சிங்கம்' என புகழப்பெற்ற ஷேக் அப்துல்லாஹ்வை சிறையில் அடைத்தது இந்திய அரசு. இதையெல் லாம் இழந்து, இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொண்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கை யாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான்.
காஷ்மீர் பகுதியில் 12,799 அடி கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் அமர் நாத்தில் உள்ள குகை கோயிலுக்கு இந்துக்கள் பல நூற்றாண்டுகளாகச் சென்று வருகிறார்கள். இதை காஷ்மீரி கள் எதிர்க்கவில்லை. இந்து யாத்ரீகர் களுக்கு 400 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரிகள் எல்லா ஒத்துழைப்பு களையும் நல்கி வருவது அனைவருக் கும் தெரியும். காஷ்மீரின் அரசியல் சிக்கலில் அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் சர்ச்சையாக்கவில்லை.
காஷ்மீர் அரசின் வனப்பகுதிக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்துகொடுக்க ஒதுக்கிய போதுதான், போதிய விளக்கங்களை அரசு தராத தால் இருதரப்பும் தவறாக விளங்கிக் கொண்டனர்.
காஷ்மீரிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்ற தங்களின் உரிமைக்கு பங்கம் விளைவிக்க செய்யப்படும் 'சதியோ' என காஷ்மீரிகள் அச்சம் கொண்டனர். சாதாரணமாக நுழைந்து, பின்னர் இதையே முன்னு தாரணமாக்கி தங்களது மண்ணுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர்.
காஷ்மீரிகளின் அச்சத்தை ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி டாக்டர் அருண்குமார்தான் மேலும் பற்றியெரிய வைத்தவர்.
நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது. தங்கள் சந்தேகம் சரியானது என அவர்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர்.
உடனே பாரதீய ஜனதா ஆதரவு அமைப்புகள்,இதை நாடாளு மன்ற தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தனர். ஜம்மு பகுதியில் வாழும் மக்களைத் தூண்டிவிட்டதில் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், அமர்நாத் யாத்ரா சங்கர் சமிதி போன்ற அமைப்புகள் பெரும் பங்காற்றின.
காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் பகுதியில் இந்துக்களின் நகரமும், குடியிருப்புகளும் உருவாகப் போகின் றன என்ற பீதி காஷ்மீரிகளை ஆட்டிப் படைக்கிறது. இது ஒருவகையான ஆக்கிரமிப்பு முயற்சி என அவர்கள் கருதுகிறார்கள்.
எதிர்ப்புக்கு பயந்து அப்போது முதல்வராக இருந்து கடைசியில் இதற்காகவே ஆட்சியை இழந்த குலாம் நபி ஆசாத், நிலம் வழங்குவதை ரத்து செய்தது ஜம்மு பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துவிட்டது.
குலாம் நபி ஆசாத், ஜம்முவில் பிறந்தவர். தனது செல்வாக்கை உயர்த்த அவர் அடித்த 'ஸ்டன்ட்' அவரை பாதித்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்போது காங்கிரஸின் வீழ்ச்சியை தங்களுக்கு சாதகமாக்கு வதற்கு பாஜக ஜம்மு பகுதியில் வாழும் மக்களைத் தூண்டி விடுகிறது.
இன்று காஷ்மீர் உலக கவனத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறது. இந்துக் கள் கணிசமாக வாழும் ஜம்மு, முஸ்லிம் கள் நிறைந்து வாழும் காஷ்மீர், புத்தர்கள் அதிகளவில் வாழும் லடாக் என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வெடிக்கிறது.
மூன்று இன மக்களும் கலந்து வாழும் தேசிய காஷ்மீர் என்ற மதச்சார்பற்ற சிந்தனையை முன்வைத்த மீர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் ஜம்முலிகாஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்பு கள்கூட, ஜம்முலிகாஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
காஷ்மீரோ மீண்டும் 1990லின் நிலைக்கு போய்விட்டதாக செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல்வாதிகளின் சுயநலம் அழகான காஷ்மீரை அமளிக் காடாக்கி இருக்கிறது. இதில் காஷ்மீரி களின் நியாயங்களும், உண்மைகளும் மறைக்கப்படுகின்றன.
அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் தடுக்கவில்லை. இந்து யாத்ரீகர்கள் அங்கே தற்காலிகமாக தங்குவதையும் எதிர்க்க வில்லை. தங்களுக்கு அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவு தந்திருக்கும் மண்ணுரிமையை யாரும் பறிக்கக்கூடாது; பங்கு கேட்கக்கூடாது என்பதே அவர்கள் நிலை. இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?

Thursday, August 14, 2008

MNP


MNP Protest against The Humanrights Violation of Tamilnadu Police In India.

Thursday, August 7, 2008

தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை


நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப் புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறு வனங்கள் முஸ்லிம் அமைப்பு களையும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்கு வதையும், கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக் கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும், ஒளிபரப்புவதை யுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.

சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்தி கள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாகிதள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்ல வியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளி யிட்டு அரிப்பை தீர்த்துக் கொண் டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த மீடியாக்கள் மறுபுறம் கேட்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் என்ன கூறப்படு கிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல் பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதி கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும், மதத்தை யும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்ட னைக்குரியது. ஆனால் எழுது வதற்கு முன்னால் தங்கள் மூளை யிலும், பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊட கங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண் டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர் கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள் ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்க ளையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.

தமிழக ஊடகங்களில் இந்துத் துவா மற்றும் ஏகாதிபத்திய கைக் கூலிகளே நிறைந்திருக்கும் சூழ் நிலையில் பொதுவான நடுநிலை யான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண் டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியை கொண்டு தமிழகத் தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத் துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊட கத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

Tuesday, August 5, 2008

கேள்வி: தமிழகத்தில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் இன்றைய தினம் செய்ய வேண்டிய அவசிய பணிகளாக எதனை கருதுகிறீர்கள்?

பதில்: முதலாவது, ஜமாஅத்துகள் அல்லது பள்ளிவாசல்கள் தோறும் ஆரம்பக் கல்விக்கூடங்களை உருவாக்குவது. இரண்டாவது, தொகுதி அல்லது தாலுகா வாரியாக 'பைத்துல்மால்'களை உருவாக்குவது. இவையிரண்டும் மிக முக்கிய பணிகளாகும். கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு இவையிரண்டும்தான் மிகமுக்கிய சேவைகளாகும். மூன்றாவது, சமுதாய அமைப்புகள் விமர்சனங்களை தவிர்த்துக் கொண்டு அவரவர் பாதையில் பணியாற்றுவது. இதன்மூலம் சமூகத்தில் குழப்பமும், வீண் மோதல்களும் தவிர்க்கப்படும். இதுகுறித்து அனைத்து அமைப்புகளும் பரந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்.

சாதிக் அலி, மலேசியா

கேள்வி: தான் பிரதமராவதை ஜீரணிக்க முடியாமல் பாஜகவும் காங்கிரசும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நாடகமாடி விட்டதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில்: இந்த கூற்றில் உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்சிக் கவிழ்ந்தால்..., அதனால் ''தான்'' மட்டுமே பயனடைய வேண்டும் என்று அத்வானி கருதினார். மதச்சார்பு அமைப்பு மதச்சார்பற்ற அமைப்பு என இரு அணிகள் இருந்தால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யலாம். மூன்றாவது அணி வலுப்பெற்றால் தனது பலம் சிதறும் என காங்கிரஸ் கட்சி கருதியது. இரு கட்சிகளிலும் இருக்கக்கூடிய ஆதிக்க சக்திகள் ஒரு தலித், தன்னெழுச்சியோடு பிரதமர் பதவி அடைவதை மொத்தமாகவும், சுத்தமாகவும் விரும்பவில்லை. அந்த வகையில் மாயாவதியின் கூற்றை நிராகரிக்க முடியாது.

இது ஒருபுறமெனில், மாயாவதி ஒன்றும் காங்கிரஸ், பாஜகவை விட நேர்மையான தலைவரும் அல்ல. அம்பேத்கரின் சிந்தனைகளும், கன்ஷிரா மின் போர்க்குணமும் அவரிடமிருந்து எப்போதோ காணாமல் போய்விட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எஸ். அஜ்மல்கான், சென்னை-14

கேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி திமுகவை தமுமுக நிர்பந்தப்படுத்தியதாக சொல்லப் படுகிறதே...?
பதில்: தமுமுக சார்பில் நமது கோரிக்கையை அன்று கடிதமாக திமுக தலைமைக்கு அளித்தோம். அவர்கள் அதை ஏனோ பரிசீலிக்கவில்லை. குறைந்தபட்சம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் சில மாற்றங் களை செய்ய வேண்டும் என்ற அளவிலாவது பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக தலைமை வற்புறுத்த வேண்டும். வட்டார நலனை விட பரந்து பட்ட தேச நலனும், சர்வதேச பார்வையும் திமுகவிடம் உண்டு என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் உண்டு. இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் காயிதேமில்லத் தின் வழிதான் தங்கள் வழி என்று அண்ணா அறிவித்தார். சீனப் போருக் காக, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார்.
இத்தகைய பார்வையுடன் உருவாக்கப் பட்டது தான் திமுக, இன்று இந்திய நாடு அமெரிக்காவிடம் அடமானம் வைக்கப் படாமல் காப்பாற்றும் கடமை தனக் குள்ளது என்பதை உணரவேண்டும்.
எஸ். அப்துல் ரஹ்மான், கீழக்கரை
கேள்வி: சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை அவரது நிலைபாட்டிற் காக மீடியாக்கள் ஒருபுறம் பாராட்டு கிறது, ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று கூறி கம்யூனிஸ்டு கள் அவரை கட்சியிலிருந்து வெளி யேற்றி இருக்கிறார்கள். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது?
பதில்: கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பதவிக்கான கண்ணியத்தை சோம்நாத் சாட்டர்ஜி, 40 வருட நட்புகளையும் மீறி காப்பாற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட நியாயமானவர் கட்சிக் கட்டுப்பாடுகளை உடைக்கும் போது 40 வருட சேவையை விட கட்சியின் நலனே முக்கியம் என சி.பி.எம். தலைமை தங்கள் நிலைபாடு களை காப்பாற்றி இருக்கிறது. கண்ணிய மான ஒரு தலைவரையும், கட்டுப்பாடான ஒரு கட்சித் தலைமையையும் இந்திய மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
இதில் யார் பக்கம் நியாயம் என்பதை விட, இருதரப்பும் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடமையில் கொள்கையில் சமரசம் செய்யாதிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.
இரா.சங்கர், மேடவாக்கம்
கேள்வி: பெங்ளூரிலும்-அஹமதா பாத்திலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளினால் முஸ்லிம் சமுதாயம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டுள்ளதே...?
பதில்: நடைபெற்ற குண்டுவெடிப்புகள் கண்டிக்கத்தக்க பயங்கரவாதம் மட்டுமல்ல, கோழைத்தனமானதும் கூட. முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள், அறிவுஜீவிகள் மட்டுமல்ல, மார்க்க அறிவும் பொறுப்புணர்வும் கொண்ட ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் வெளிப்படையாக பயங்கரவாதத்தை எதிர்க்கிறார்கள். அகமதாபாத்திலும், பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடைபெற்றபோது அந்நகரங்களில் உதவி செய்வதற்காக ஓடித்திரிந்த முஸ்லிம்களின் உணர்வுகளை பலரும் ஏனோ அறிய வில்லை.
குண்டுவெடிப்பு குறித்த முறையான விசாரணை தொடங்கப்படாமலேயே சிமி, லஷ்கர், இந்தியன் முஜாஹிதீன், அஹ்லே ஹதீஸ் என பல அமைப்புகளின் பெயர் களை வெளியிடுபவர்கள், பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் காவி பயங்கரவாத அமைப்புகளைப் பற்றி ஏனோ சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள்.

யாரோ சில தறுதலைகள் குற்றமி ழைக்க அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல, கண்டிக்கத்தக்கது. பொறுப்புணர்வற்ற பத்திரிக்கைகளும் உளவுத்துறையில் இருக்கும் ஒரு சிலரும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். அப்படியே ஒரு வாதத்திற்காக ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கைது செய்யப்பட்டாலும் அதற்கும் 20 கோடி இந்திய முஸ்லிம்கள் எப்படி பொறுப்பேற்பார்கள்?

அத்வானி பாபர் மசூதியை இடித்ததற்காக 80 கோடி இந்துக்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பது எப்படி தவறோ, அதேபோல்தான் இதுவும் தவறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கே. அகமது சமீம், மண்ணடி
கேள்வி : பெங்களூர் அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இது திட்டமிட்ட நாடகம் என்றும், மதுரையில் எம்.என்.பி. நடத்தவிருக்கும் சுதந்திர தின அணி வகுப்பைத் தடுக்க நடக்கும் முன் நாடகம் என்றும் சொல்லப்படுகிறதே...?
பதில்: எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? பொத்தாம் பொதுவாகப் பேசிவிட்டு செல்லக்கூடிய விஷயமல்ல இது. கவனமாகவும் லி நுட்பமாகவும் ஆராயப் பட வேண்டும். சந்தேகத்தில் கைது செய்து விசாரிப்பது என்பது வேறு, பொய்ப்பழி சுமத்தி பிரச்சனையை திசைதிருப்புவது என்பது வேறு. தமிழகக் காவல்துறையிலும் உளவுத்துறையிலும் இருக்கும் பெரும்பா லோர் நேர்மையானவர்களே. ஆனால் அவர்கள் வீண் பரபரப்புக்கு இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு வருவோரையும், ஜனநாயக வழியிலான அவர்களது பணிகளையும் கெடுக்கக்கூடாது. அதற் காக தமிழகத்தில் கைது படலங்கள் நடப்பதாக வரும் செய்திகள் நிரூபிக்கப் பட்டால், அது கடும் கண்டனத்திற்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்.
சர்ப்ராஸ், அண்ணா நகர், சென்னை
கேள்வி : சமீபத்திய நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுகளில் உங்கள் மனதை மிகவும் பாதித்தது எது?

பதில்: சென்ற மாத மத்தியில், ஜப்பானில் ஜி 8 நாடுகளின் மாநாட்டில் பங்குக் கொள்வதற்காக நமது பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ஜூலை 16 அன்று பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் சொன்னவை நமது மனதை மட்டுமல்ல மனிதநேயமுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் ரணகளமாக்கியிருக்கும்.
''இந்தியாவும் அமெரிக்காவும் தலை நிமிர்ந்து தோளோடு தோள் நிற்க வேண்டும், அது தான் நடைபெற போகின்றது.''
லி இது தான் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானில் உள்ள ஹோக்க ஹைடோ நகரத்தில் கடந்த ஜூலை 9 அன்று தெரிவித்த கருத்து. இந்தக் கருத்தை அவர் வெளியிட்ட போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அருகில் நின்றிருந்தார். ஜார்ஜ் புஷ்ஷின் உள்ளத்தை குளிர வைப்பதற்காக நமது பிரதமர் சொன்ன இந்த வார்த்தைகள் நியாயவான்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ரணகளமாக்கியுள்ளது. இதற்கு ஒரு படி மேலே சென்று இந்திய மக்களில் சிந்தனை திறன் படைத்தவர் களும் இதே கருத்தில் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உலக சூழலைக் கருத்தில் கொள்ளாமல், பொறுப்புணர்வு இல்லாமல் சொல்லப்பட்டவை தாம் பிரதமரின் கருத்துகள். அமெரிக்கா வுடன் இந்தியா தோளோடு தோள் நிற்ப தாக சொல்­ முடித்த சில கணங்களில் அமெரிக்க விமானம் வீசிய குண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கு கொண் டிருந்த 41 பேரின் உயிரை பறித்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். 2003ல் தொடங்கி பிரதமர் பேசிய ஜூலை 9 வரை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் ஈராக்கில் 12,36,604 மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். அமெரிக்காவின் இந்த பாவச் செய­ல் இந்தியா தோளோடு தோள் நிற்கின் றதா? பாலஸ்தீனத்தில் அன்றாடம் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடுமை களுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகின்றது. இந்த அராஜகத் திலும் அமெரிக்காவிற்கு இந்தியா தோள் கொடுக்கின்றதா?
இந்தியாவில் வாழும் தெளிவான சிந்தனை ஆற்றல் உள்ள எந்தவொரு மனிதனும் பிரதமரின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டான். ஜார்ஜ் புஷ் முன்னிலையில் நமது பிரதமர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனை யும் தலைகுனிய வைக்கும்.

தாஜ்மஹாலை குறிவைக்கும் 'சங்' பயங்கரவாதிகள்


உலக அதிசயங்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் தாஜ்மஹாலை, பாபரி மஸ்ஜித் பாணியில் அபகரிக்க இந்துத்துவ பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி யுள்ளனர். இது அவர்களின் நெடுங்கால சதித்திட்டமும் கூட. பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் காசி, மதுரா பள்ளிவாசல்களின் இடத்தில் கிருஷ்ணன் கோவில் இருந்ததாகவும், புளுகித் திரியும் இந்தப் போக்கிரிக் கும்பல், தாஜ்மஹால் இடத்தில் சிவன் கோவில் இருந்ததாகக் கண்டுபிடித துள்ளது (?)

தேஜோ மஹால் என்ற சிவன் கோவிலைத்தான் ஷாஜஹான் தாஜ் மஹால் என்று மாற்றிவிட்டதாகவும், தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த பயங்கர வாதிகள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் 24.07.2008 வியாழன் அன்று 12 பேர் கொண்ட சிவசேனா பயங்கரக் கும்பல் புகுந்து, தாஜ்மஹாலில் 'ஆர்த்தி' என்னும் பூஜை நடத்த முயன்றுள்ளனர்.

தாஜ்மஹாலுக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்ய முயன்றோரை காவல்துறையினர் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சிவசேனாவின் ஆக்ரா தலைவர் விணுவால் வானியா, இது குறித்து கூறும் போது, 'தாஜ்மஹால், இதற்கு முன் தேஜோ மஹால் என்ற பெயரில் இருந்த சிவன் கோவில்தான். இது மதுரா கோவில் அறக்கட்டளையின் கீழுள்ள ரங்ஜி கோவிலுக்கு சொந்தமானது. எனவே, எங்கள் தொண்டர்கள் அதை மீட்க முயல்வதில் என்ன தவறு உள்ளது? என்று உளறியுள்ளார்.

பாபரி மஸ்ஜிதை அபகரிக்கச் சென்றவர்கள், முதலில் ஆயுதங்களோடு செல்லவில்லை. பள்ளிவாசலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சிலைகளை வைத்தனர். பின்னர் மஸ்ஜிதே பறி போனது.

பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த பயங்கர வாதிகள் 'காசி மதுரா பாக்கி ஹை' என்று கோஷமிட்டனர்.

காசி, மதுரா பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்பது இதன் பொருள்.
அவர்களின் அபரிக்க வேண்டிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சின்னங் களின் பட்டியலில், தாஜ்மஹாலும் இருக்கிறது.

தாஜ்மஹாலுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு, மிகவும் கவலைக்கிடமானது என்பதை அங்கு சென்று வந்தவர்கள் அறிவர்.

உத்தரப்பிரதேச வக்ப் வாரியம் தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தாஜ்மஹாலை தனது பொறுப்பில் வைத்துள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை, தாஜ்மஹாலை 'இல் பொருள் ஆக்கிவிடாமல், அதனை உடனடியாக வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தாஜ்மஹாலை அபகரிக்க முயலும் சங்பரிவார பயங்கர வாதிகளுக்கு எதிராக, உறுதிமிகு நடவடிக் கைகள் இதுவரை அரசு மேற்கொள்ளா தது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது. இப்போதே அரசாங்கம் விழித்துக் கொண்டால், எதிர்கால விபரீதங்கள் தடுக்கப்படலாம்.

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?


அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் முன்னணிப் பிர முகர்கள் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் குறிப்பிடுகின்றது.

அமெரிக்க அரசியல் களத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாயகக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. முன்னாள் அதிபர்களான ஜான் எஃப் கென்னடி, பில் கிளிண்டன் உள்ளிட்டோர் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றனர்.
இந்நிலையில், கென்ய வம்சாவளியைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னாள் அதிபர்களைப் போன்றே பெருவாரியான வாக்குகளை பெற வாய்ப்பிருந்தும் அதில் தீவிர கவனம் செலுத்தாமையினால் வாக்குகள் குறையும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க முன்னணி பத்திரிக்கையாளர் ஸகீப் ரங்கூன் வாலா தெரிவிக்கிறார்.
அமெரிக்க மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இடம் பெறும் முஸ்லிம்களில் 70 லட்சம் பேரில் 61 சதவீதத்தின் ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் 11 சதவீதத்தினர் மட்டுமே அதிபர் புஷ்ஷின் குடியரசுக் கட்சி யினரின் ஆதரவாளர்கள் என அமெரிக்காவின் முன்னணி சமூக நல அமைப்பான கேர்ன் சிக்காகோ பகுதி அமைப்பாளர் அஹ்மத் ரெஹாப் குறிப்பிடுகிறார்.
முந்தைய தேர்தல்களைப் போல ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம் களின் ஆதரவை ஓருங்கிணைப்பது சற்று கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்தனார்

சேதுக்கால்வாய் சர்ச்சை: பாலத்தை ராமர் கட்டினாரா? இடித்தாரா?


சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட பாஜக, அதிமுக முதலான கட்சிகள் ராமர் பாலம் கடலுக்குள் இருப்பதால், அதை இடிக்கக் கூடாது என கூக்குரலிடுகின்றனர்.


இவ்வாறு, அவர்கள் கூச்சலிடக் காரணம், குரங்குகள் உதவியோடு, அணிலின் ஒத்துழைப்போடு, 'கடத்திச் செல்லப்பட்டத் தனது மனைவி சீதையை' மீட்க, ராமன் கடல் மீது பாலம் போட்ட தாக ராமாயணக் கதையில் வருகிறது.


சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறி னால் அந்தப் பாலத்திற்கு பாதிப்பு வரும்? ஆகவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.


வெளிநாட்டுக்காரர்கள் இந்த கதை களையும் காரணங்களையும் கேட்டால், வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, மக்கள் பணம் 2,500 கோடியை இத்திட்டத்திற்காக கடலில் போட்டுள்ளது மத்திய அரசு.


அது முதலில் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ''ராமாயணம் என்பது நடந்த ஒரு வரலாறு அல்ல. கற்பனைக் கதை'' என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.


ராமரை முதலீடாக வைத்துக் கட்சி நடத்தி வரும் பாஜக சும்மா விடுமா? நாட்டை ரணகளமாக்க போவதாக மிரட்டி, மத்திய அரசை, பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வைத்தது.


மறுபடி, இப்போது ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு, சேதுக்கால்வாய் தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பராமாயணப்படி, ராமர் கட்டிய பாலத்தை ராமரே இடித்து விட்டதாகவும், இப்போது அங்கே பாலம் ஏதும் இல்லையென்றும் கூறியுள்ளது.


உடனே, ஆன்மீக தமிழறிஞர்கள் சில பேர் இது தவறான வாதம். ராமர், பாலத்தை இடிக்கவில்லை, மத்திய அரசு குறிப்பிடும் கருத்து ''மிகைப் பாடல்கள்'' என்ற பகுதியில் தான் உள்ளன. அவை ஆதாரப் பூர்வமான (ஸஹீஹான) செய்தி (?) இல்லை என்று கூறியுள்ளனர். அவர் களின் கருத்தை ஆங்கில ஏடுகள் சில பெரிதுபடுத்திக்காட்டின.


சேதுக்கால்வாய் திட்ட எதிர்ப்பாளர் களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ் பவரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளரும் மிகச் சிறந்த தமிழ் மேதையுமான சுபவீயிடம் நாம் இது பற்றிக்கேட்டோம். அவர் கூறியதாவது.


'கம்பராமாயணம், யுத்த காண்டம், மீட்சிப் படலத்தின் 117வது பாடலில், ராமன், 'படகுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், தான் கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை கீறி, அதாவது உடைத்து, படகுப் போக்குவரத்துக்கு உதவிய செய்தி இடம் பெறுகிறது.


ராமர்பாலம் ஒன்று இருக்கிறது என நாம் வாதத்துக்காக வைத்துக் கொண்டா லும், படகுப் போக்குவரத்துக்காக, ராமர் கொஞ்சம் இடித்தது போல, கப்பல் போக்குவரத்துக்காக இன்னும் கொஞ்சம் இடித்தால் என்ன தவறு? இது ராமன் தொடங்கி வைத்த செயல்தானே?


கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளுக்கெதிராக பாலத்தை இடிக்கக் கூடாது? என ஜெயலலிதா கொந்தளிக்கிறார்.
அவருக்கு ஏன் இந்த கொதிப்பு? அவர் தன்னை சரியாக அடையாளம் காட்டுகிறார்.


வைகை நீர்த்தேக்கம் கட்டும் போது, நூற்றுக்கணக்கான சிறு தெய்வக் கோவில் கள், மதுரை வீரன், சுடலை மாடன், மாரியாத்தா கோவில்கள் இடிபட்டனவே, அப்போது இவர்கள் கூக்குரலிட்டார்களா?


அவை இந்துக் கோவில்கள் இல்லையா? சாதாரணத் தமிழ் மக்கள் வழிபடும் கோவில்களுக்கு அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள். ராமன் அவாள்களின் தெய்வம். ஆகவே, கோடிக்கணக்கான இந்துக்கள் என்று கூட்டம் சேர்ப்பார்கள்'. என்று தனக்கே உரிய பாணியில் நெத்தியடி பதில் கூறினார் சுபவீ.


பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவற்றிற்காகக் கடலை ஆழப்படுத் தும் போது, அங்கும் மணற்திட்டுகள் இருந்தன. அங்கும் ராமர்தான் போய் பாலம் கட்டினாரா என்று அறிவார்ந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


ராமர் பாலத்தை இடிக்க முயன்றால் அதை அதிமுக சகிக்காது, எல்லா வகையிலும் (?) அதை எதிர்க்கும் என்று முழங்குகிறார். ஆரிய நாரிமணி ஜெயலலிதா அம்மையார்.


அண்ணா திமுக என்பது அண்ணா வின் கனவுத் திட்டம் சேதுக்கால்வாய் திட்டம், அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு அண்ணாவின் திட்டத்தை எதிர்ப்பது துரோகமில்லையா?



ராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்து என்ன? ஜெயலலிதாவிற்கு விளக்கம் தேவையானால் அண்ணா எழுதிய 'கம்பரசம்' என்ற புத்தகத்தை அவர் படிக்கட்டும்.



அண்ணாவின் கொள்கைகளை அடியோடு எதிர்ப்பவர் தனது கட்சிப் பெயரை இனியும் அண்ணா திமுக என்று வைக்காமல் அத்வானி திமுக என்று மாற்றிக் கொள்ளட்டும்.



ராமர் பாலத்தை ராமரே இடித்து விட்டார் என்று கம்ப ராமாயணத்தில் இருப்பதால், அதை ஓர் உண்மை வரலாறு போல, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருப்பது, மடமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது.


கம்ப ராமாயணம் ஒரு கட்டுக்கதை ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் நாட்டில் உள்ளன. ஒரு ராமாயணத்தில் ராமனுக்கு சீதை சகோதரி.


வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையின் கூந்தலை பிடித்திழுத்து மடியில் அமர்த்திக் கடத்திச் சென்றதாக உள்ளது. கம்பராமாயணத்தில் வீட்டோடு நிலத்தைப் பெயர்த்து சீதையைக் கடத்திச் சென்றதாக உள்ளது.


ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று ராஜாஜி போன்றவர்களே அடித்துச் சொல்லியுள்ளனர்.


இந்தப் புராண புளுகுகளை அரசின் பிரமாணத்தில் ஆதாரம் காட்டுவது அபத்தமானது.



மாற்றுப் பாதையைப் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியிருப்பதும் கடமை தவறும் மடமைச் செயலே.



சேதுக்கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்த துரோகமாகவே அது அமையும்.