Wednesday, October 15, 2008

ஆந்திரா மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக் கொலை


ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம் மத பயங்கரவாதத்தின் கொடு மைக்கு இலக்கானது. ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 6 பேர் (இரண்டு வயது குழந்தை உள்பட) உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.


பைன்சா நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் வடோலி என்ற கிராமத்தில் இந்தக் கொடுமை நிகழ்ந்தது.



மஹ்மூத் கான் தையல் தொழி லாளி யான இவர் மனைவி சஃபியா பேகம், தனது மகள், ரிஸ்வானா மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளான நுஃமான், அர்சலான், துபாஃபலக் என்ற இரண்டரை வயது குழந்தை உள்பட ஆறுபேரும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.


அதிகாலை மூன்று மணியளவில் அந்தப் பகுதியில் நுழைந்த வெறிக் கும்பல் டெய்லர் மஹ்மூத் கானின் வீட்டை வெளிப்புறமாக பூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளது.


மத சிலை ஊர்வலத்தை வைத்து பெரும் கலவரத்தை உருவாக்கிய சக்தி கள் பெரும் வன்முறையை திட்டமிட்டு அரங்கேற்றின. வடோலி கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் உயிருக்கு அஞ்சி பைன்சா பகுதிக்கு சென்றனர். வெள்ளிக் கிழமை 30 குடும்பதினர் தப்பிச் சென்ற போதிலும் டெய்லர் மஹ்மூத் கான் குடும்பத்தினர் மட்டும் பைன்சா செல்லவில்லை. வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு இலக்காகி விட்டனர். துர்கா சிலை ஊர்வலம் தொடர்பாக வெடித்த கலவரத்தில் முதலில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பைன்சா பகுதியில் பிறப்பிக்கப் பட்டிருந்தாலும் கூட நிர்மல் மற்றும் அடிலாபாத் நகரங்களுக்கும் கலவரம் பரவியது.


மாநில உள்துறை அமைச்சர் கே.ஜனா ரெட்டி மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.எஸ்.பி யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் மஜ்லீஸெ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி சம்பவ இடத்திற்கு வந்து அங்கு வந்தி ருந்த மாநில அமைச்சர் ஜனாரெட்டியிடம் நேரிடையான தனது கண்டனத்தை தெரிவித்தார். சிறுபான்மை சமூகத்தின ருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் மாநில அரசு படு தோல்வி அடைந்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.


நடைபெற்ற படுகொலைகளுக்கு தேசத் துரோக ஆர்.எஸ்.எஸ் இயக்கமே முக்கிய காரணம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.


தசரா ஊர்வலத்தில் வன்முறை வெறி யாட்டம் நடத்தி கடந்த 48 மணிநேரத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த சமூக விரோதக் கூட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாக கொல்கத்தாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு குறிப்பிட்டுள்ளது.


நடைபெற்ற கலவரத்திற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீவைத்து கொல்லப் பட்டதற்கும் சிபிஜ விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்றும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிக்காமல் உள்துறை அமைச்சர் தனது வீட்டிற்கு செல்ல முடியாது என அசதுத்தீன் எச்சரிக்கை விடுத்தார்.


வடோலி மற்றும் பைன்சா பகுதிக்கு உடனடியாக வந்த தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில காவல்துறை முழுமையாக செயலிழந்து விட்டது என குற்றம் சாட்டினார்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உறவு களை பறிகொடுத்தவர்களுக்கும் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ் தெரிவித்திருக்கிறார்.


இந்நிகழ்வுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும் (அப்படி போடு!) என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.


அப்பாவி மக்களின் ரத்தங்களை குடிப்பவர்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுத்ததே இந்த கொடும் செயலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

விழுப்புரம்: பள்ளிவாசல் மீது தாக்குதல் காவல்துறை மெத்தனப் போக்கிற்கு முஸ்லிம்கள் கண்டனம்


அமைதி விரும்பாத இந்துத்துவவை பாசிச வெறிக்கும்பல் தங்கள் கைவரி சையை விழுப்புரம் தக்வா பள்ளிவாசலின் மினாராவை உடைத்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் வன்முறை வெறியாட்டம் துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 11.10.2008 அன்று விழுப்புரம் சிற்றேரிக் கரையில் மஸ்ஜிதே தக்வா பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி நீண்ட நெடுங்காலமாக தமிழக வக்ப் வாரியத்தின் காலி இடமாக இருந்ததையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் நாற்புற மும் கோட்டைச் சுவரை எழுப்பி நடுவில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இரு புறமும் உயர்ந்த கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அதைச் சுற்றி லும் 150 முஸ்லிம் ஏழைக் குடும்பங்கள் குடியிருப்புகள் உள்ளன. அதற்கு சற்று தூரத்தில் கிறித்தவ மக்களின் கல்ல றைத் தோட்டமும் உள்ளது. கிறித்தவக் கல்லறைகள் பலவற்றை பாசிசக் கும்பல் உடைத்து இழிவுபடுத்தியது. அதற்கு சில தினங்கள் கழித்து இப்பள்ளியின் நுழைவாயில் கேட் மினாரா உடைக்கப் பட்டுள்ளது. பள்ளியின் சன்னல் கண்ணா டிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள் ளன. காலையில் சுப்ஹு தொழுகைக் குச் சென்ற இமாம் மற்றும் ஜமாத்தார் கள் அதிர்ச்சியுற்றனர். பள்ளிவாசல் காம்பவுண்ட்டைச் சுற்றிலும் ஏராளமான லோக்கல் சாராய பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன.

இத்தகவலை அறிந்த தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது விழுப் புரம் விரைந்து தமுமுக மாவட்ட அனைத்து நிர்வாகிகளிடமும் ஜமாத்தார்களிடமும் விசாரித்து இரவு ஏழு மணிக்கு சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத் துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சி பிரமுகர்களின் கருத்தையும் கேட்டறிந்தார். ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகளும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதத்தின் பெயரால் இழிசெயலில் ஈடுபடும் பாசிச இந்துத்துவ சக்திகள் உடனடியாக காவல்துறையால் கண்டறியப்பட்டு தமிழக அரசின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக் களுக்கு இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படாவிட் டால் அனைத்துக் கட்சிகள் சார்பில் விழுப்புரம் காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Sunday, October 12, 2008

மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு... வீரத் தாயின் ஆவேசம்


டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.

அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

தவுகீர் அப்பாவி

தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.

தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா?

Wednesday, October 8, 2008

போலிஎன்கவுண்டர்: ''எங்கிருந்தோ கொண்டுவந்த பிணங்கள்!





டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த விமர்சனக் கணைகளால் ஆடிப் போன மத்திய அரசும், டெல்லி பிரதேச அரசும் எத்தைத் தின்றால் பித்தம் தனியும் என்ற நிலையில் தடுமாறியது. இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என அப்பாவிகள் மீது குற்றம்சாட்டி வளைத்துப் பிடித்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு குற்றங்களில் சங்பரிவார் இயக்கங்கள் பின்னணியில் இருந்ததாக பல்வேறு மட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த கோணத்தில் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ துப்பறிந்த தில்லை. உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய உண்மை எண்ணம் இல்லையோ என்பதை நிரூபிக்கும் விதமாக அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாக வும் அதில் இருவர் கொல்லப்பட்ட தாகவும், கொல்லப்பட்டவரில் ஒருவர் ஆதிஃப் என்ற பஷீர்தான் முக்கிய சதிகாரன் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் தெரிவித் தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியும் பலி யானதுதான் பெரும் சோகம்.


டெல்லியின் ஜாமியா நகர் பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி யாகும். குறுகிய சந்துகளில் திடீரென நாடகம் போல் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

குறுக்குச் சந்துகளில் குமுறலுடன் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் முஸ்லிம் கள் குழுமினர்.
ஒலிபெருக்கிகளின் மூலம் பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாரம்பரியம் மிக்க பல்கலைக் கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டது தேவையற்ற பதட் டத்தை ஏற்படுத்தியது. ஜாமியா நகரில் ஒரு போலி என்கவுண்டர் நிகழ்த்தி ஓர் அபார்ட்மெண்டில் நான்காவது தளத்தில் இரண்டு உடல்களை வேண்டுமென்றே வைத்து நாடகமாடுவதாக ஜாமியா நகர மக்கள் கோஷம் எழுப்பினர்.
சில உள்நோக்கம் கொண்ட தொலைக்காட்சிகள் பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தவறான தகவல்களைக் கொடுத்தன.
ஜாமியா நகர் பாட்லா ஹவுஸ் அபார்ட்மென்டில் 4வது மாடியில் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
நடைபெற்ற இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கோரிக்கை விடுத்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆன வர். ஜாமியா நகர் பகுதி மக்கள் வெகு காலமாகவே காவல்துறையினரின் கெடுபிடிகளில் சிக்கி வேதனையடைந்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வுக்கும் பிறகு இப்பகுதியை சல்லடையாக சலிப்பதே நடைமுறையாகி விட்டது என்றும் தனது குமுறலை ஜீலானி தெரிவித்தார்.
இருவர் முன்கவுண்டர் செய்யப்பட்ட விதமும், என்கவுண்டர் செய்த இடமாக காவல்துறையினர் குறிப்பிடும் இடமும் முழுமையாக சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் முகத்தை பொதுமக்களிடம் காட்டவில்லை. மர்ம மான முறையில் போர்வையால் மூடப் பட்டதைக் கண்டு சந்தேகம் எழுப்புகிறார் ஃபைஸல்கான் என்ற அப்பகுதிவாசி. எங்கள் பகுதியைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறார்கள். அவர் மாணவரா? அல்லது குடும்பஸ்தரா? என்பதை எங்களிடம் காட்டாமல் அவர்கள் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? அவர்களாகவே மர்மமான முறையில் அறிவித்திருப்பது நிச்சயம் சந்தேகத்துக் குரிய ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடுகிறார்கள் அவ்வூர் வாசிகள்.
நீங்கள் இந்தப் பகுதி யைப் பாருங்கள், யாரும் தப்பித்து ஓடும் நிலையிலா இருக்கிறது? மிகவும் மக் கள் நெருக்கமான பகுதி யில், அதிலும் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்முகாமிட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ள யாருமே எவ ரும் தப்பித்து ஓடியதைப் பார்த்ததில்லை என டெல்லி ஜாமியா நகர் பகுதிவாசி ஆர்.ஆபித் குறிப்பிடுகிறார்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் தின் விரிவுரையாளர் ஃபரியாத் தீவிர வாதிகள் பதுங்கி இருந்ததாக சொல்லப் படும் எல்-18 அபார்ட்மென்ட்டின் பின்னால் வசிக்கிறார். ஒரே ஒரு சிறிய புல்லட் சத்தத்தைக் கேட்டேன் என்கிறார்.

எங்களுக்கு ஒரு உண்மை தெரி கிறது. ஒவ்வொருவரும் முஸ்லிம்களைக் குறிவைப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இந்த முஸ்லிம் பகுதி குறி வைக்கப்படுகிறது என்கி றார் ஜாமியா நகர்வாசி சலீமுத்தீன்.

டெல்லியில் நடந்த தாகக் கூறப்படும் என் கவுண்டர் குறித்து நேரம் வாரியாகப் பார்ப்போம்.

காலை 10 மணி

20 காவல்துறை அதி காரிகளைக் கொண்ட படை துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் ஜாமியா நகரில் நுழைகிறது. அந்தப் படை பிளாக் எல்-18 அபார்ட் மென்ட்டை சுற்றி வளைக்கிறது.


11 மணியிலிருந்து 11.45 மணிக்குள்

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, புல்லட் புரூஃப் என்ற குண்டு துளைக்காத சட்டை அணியாத நிலை யில் கதவை உடைக்கிறார். காவல்துறை சோதனைக்காக வந்திருக்கிறோம் என பெருங்குரலில் கத்திக் கொண்டே உள்ளே செல்ல முயலும் போது உள்ளி ருந்து 3 எம்.எம். பிஸ்டல் சீறுகிறது. மூன்று தோட்டாக்கள் சர்மாவை நோக் கிப் பாய்ந்தன. இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்தது. சர்மா தரையில் சாய, அவரை காவல்துறை யினர் தாங்குகின்றனர். மற்றொரு தோட்டா ஏட்டு பல்வான் சிங்கின் வலது கையில் துளைத்தது. காவல்துறை ஆய் வாளர் சர்மா `ஹோலி பேமிலி` மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு வயிற்றிலிருந்த குண்டு அகற்றப் பட்டது.

மூத்த காவல்துறை அதிகாரிகள் இணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) கர்னால் சிங் மற்றும் துணை ஆணையர் (சிறப்பு) அலோக் குமார் உள்ளிட்டவர்கள் ஜாமியா நகர் வந்தனர்.

சிறப்புப் படையின் பல்வேறு பிரிவின ரும் தேசிய பாதுகாப்பு கமாண் டோக்களும் அங்கு வந்தனர். மீண்டும் ஒருதடவை காவல்துறை அதிகாரிகள், அபார்ட்மென்டுக்குள் நுழைய முயல்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

22 சுற்றுகள் துப்பாக்கிகள் தோட்டாக் களை உமிழ்கின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரண்டு பேர் குதித்து தப்பியதாகவும், ஒருவர் காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் அப்புறப்படுத்து கின்றனர்.
சரியாக 11.45 மணி துப்பாக்கிச் சண்டை ஓய்ந்து விட்டதாக காவல் துறை அறிவித்து விட்டது. காவல் துறை அறிவித் ததுதான் தாமதம், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் கள் வீதிகளுக்கு வெளியே வந்து உள்ளூர் தொலைக் காட்சி சேனல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பள்ளிவாசல்களில் தீவிர வாதிகள் பதுங்கியிருந்ததாக பொய்ச் செய்தியை ஒளிபரப்பியதால் முஸ்லிம் கள் ஆத்திரம் அடைந்தனர்.

மாலை 4 மணிக்கு

டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் செய்தியாளர் கூட்டத் தில் என்கவுண்டர் குறித்து அறிவித்தார்.

மாலை 7 மணி

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா படுகாயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.

காவல்துறையினரின் என்கவுண்டர் அறிவிப்புகள் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் விவகாரக்குழு செயலாளர் முஜ்தபா ஃபரூக் அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் வஹாப் கில்ஜி மற்றும் டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி போன்றோர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

என்கவுண்டர் நடந்ததாகக் கூறப் பட்ட இடங்களில் முஸ்லிம் தலைவர் களின் குழுவோடு நானும் சென்றேன். ஆனால் எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என குமுறலுடன் கூறினார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். டாக்டர் ஜஃபருல் நாட்டின் முன்னணி சமூகநல ஆர்வலர். மில்லி கெஜட் ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியர் அவர் உள்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றபோது காவல்துறையினர் அனு மதி மறுத்ததால் என்கவுண்டர் விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. முக்கிய முஸ்லிம் அமைப்புகளான முஷாவராத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த் போன்ற முக்கிய அமைப்புகள் போலி என்கவுண்டரை எதிர்த்து மறியல் போரை செப்டம்பர் 26ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே முறையற்ற கைதுகள் தொடர்ந்து வருவதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலஹா பாத்தைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர். அவர் ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. என்ற ஆராய்ச்சி உயர்படிப்பு கற்று வந்தார். அவரை அபுல் ஃபஸல் என்கிளேவ் பகுதியில் வீடு எண் சி.81லிருந்து கைது செய்துள்ளனர். முஹம்மது ரஷீத் வீட் டிற்கு அருகில் டீக்கடை நடத்திவரும் 75 வயது பெரியவர் இதனை தெரிவித் திருக்கிறார்.


இந்தியத் தலைநகர் ஆயிரத்து நூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட போதும் அனைத்து மக்களுக்கும் கூர்மையான நீதி வழங்கி மகிழ்ந்தனர்.


ஆனால் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியின் காவல்துறையின் சித்திரவதைகளால் மனம் நொந்து நிஜாமுத்தீன் (30) மற்றும் முயீனுத்தீன் (25) ஆகியோர் தற் கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அதற்குக் காரணமான இரண்டு அதி காரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலை விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகிறதா?

Source :TMMK