Friday, November 28, 2008

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு! பெண் சாமியார் சிக்குகிறார்!!







மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது. குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும், இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர். உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது. இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது. இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார். முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு! சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!


இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்க ளைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதை களை பரப்பி வந்தனர்.



அப்பாவி இந்துக்களை ஏமாற்று வதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங் கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தி னர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம் கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.



இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரை யினர் போல் நடத்தப்பட்டனர்.



ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.



சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.



செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர் பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.



பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடு வான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.



காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின. சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.



இவர்கள் தங்களது பிற்போக்குத்தன மான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.



சாமியார்கள் பயங்கரவாத சாமியார் களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுரு வின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக் கிறார்கள்.



சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.


பெண் சாமியார் பிரக்யாசிங் போன்ற வர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.


இந்நிலையில் இதுவரை பெரிய முத லைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.


மதவெறி கூட்டங்களில் திரிசூலங் களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றா வது முனை சமாதானம் பேசும் ஹிந்துக் களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வி.ஹெச்.பி. அமைப்பில் இருந்து விலகிய சாமியார்


உ.பி. யைச் சேர்ந்த சாமியார் லட்சுமி சங்கர் ஆச்சாரியா, இவர் விசுவ இந்து பரிசத் அமைப்பில் தீவிர உறுப்பினராகவும் பிரச்சாரகராகவும் செயல்பட்டு வந்தார். பிறகு மனம் திருந்தி அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார். இஸ்லாம் தீவிர வாதமா அல்லது சாந்தியா? என்ற தலைப்பில் இவர் இந்தியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் இஸ்லாம் அமைதியை நிலைநாட்டும் மார்க்கம் என்பதை தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அந்த நூலின் பிரதியை தமுமுக தலைவரிடம் லக்னோ அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் அளித்தார். அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான் (வலது புறம்) உள்ளார்.

Saturday, November 22, 2008

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்! இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!தலைமைக் கழகம் அறிவிப்பு!!போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்க


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடை பெற்றது. பேராசியர் டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலை மையில் நடைபெற்ற தலைமை நிர்வாகி களும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோ சிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனை களில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.


மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதோடு, பாபர் மஸ்ஜித் போராட் டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுவதும் போராட்டத்தை விரி வுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப் படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்பு களுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலை நகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம் பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட் டிகள், தெருமுனைப் பிரச் சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச் சாரங்கள், களப் பணி ஆகியவற்றை போர்கால அடிப்படை யில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர் களை தலைமைக் கழ கம் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 6 ரயில் மறியல் போராட்டம் விளம்பரங்களை எழுச்சியுடன் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக பணி களை தொடங்க வேண் டும் என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.


(அறிவிக்கப்ட்ட 24 மணி நேரத்தில் சுவர் விளம்பரத்தில் முந்திக் கொண்டது திருச்சி மாநகரம்)

இந்த அறிவிப்பு தமுமுக சகோதரர் களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர் களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.

Thursday, November 20, 2008

அத்வானிதான் பெரிய தீவிரவாதி! சீறுகிறார் லாலு


ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து நாளொரு தகவலும் பொழு தொரு மர்மங்களும் அம்பலமாகி வரும் நிலையில் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஆத்திரமும் சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது.

சமூக நல்லிணக் கத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் அனைத்தும் சங்கும்பல் சதி காரர்களைக் கண்டித்து தங்கள் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விசாரணை வளையத்தில் வைக்கப் பட்டுள்ள சங் பயங்கர வாதிகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் மக்களின் வெறுப்பு திரும்பி யுள்ளது. இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியினரை தீவிரவாதக் கூட்டம் என்றும் அக்கட்சியின் பிரதமர் வேட் பாளர் எல்.கே. அத்வானி மிகப்பெரிய தீவிரவாதி என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் போட்டு உடைத்திருக்கிறார்.

பாஜக தீவிரவாதக் கூட்டம் என்றும் அது நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவும் கூறிய சமூக நீதித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்தத் தீவிரவாதிகள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலைகள் தான் என்றும் வெளுத்து வாங்கியுள்ளனர்.

அகில இந்திய தொலைக்காட்சி சானல்களில் மாலே கான் விவகாரம் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம் பாஜக வகையாறக்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவரும் நிலையில் ரயில்வேத் துறை அமைச்சர் லாலுவின் அதிரடி அறிவிப்பு சங் முகாமில் அலறலை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, November 5, 2008

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்


நாட்டில் இதுவரை நிகழ்ந்த தீய செயல்கள் அனைத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூலகாரண மாக விளங்குவது சங்கும்பல் என்ற சதிகாரக்கூட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.


காந்தியாரின் படுகொலை முதல் மாலேகான் குண்டுவெடிப்பு வரை இந்த சக்திகளின் சதிகள் அம்பலமாகின.


இருப்பினும், சங்பரிவார் சக்திகளின் அரசியல் மற்றும் ஊடக பலத்தின் காரணமாக அதை சிறியதாக்கிக் காட்டு வதும், மறைப்பதும், மழுப்புவதும் அவர் களது வழக்கமான தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. காந்தியடி களைப் படுகொலை செய்துவிட்டு கொலையாளிக்கும் எங்கள் அமைப்புக் கும் தொடர்பில்லை என்று கூறிக் கொண்டே கொலையாளி கோட்சேயின் அஸ்தியை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் இவர்கள் அதனை பெருமையாகவும் கூறிக் கொள்வார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து இந்தியா வின் மாண்பை குலைத்ததோடு மட்டு மல்லாமல் பாபரி மஸ்ஜிதை இடித்ததற் காக பெருமைப்படுவதாக சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கொக்கரித்தார். இவ்வாறு தேசத் துரோக மனிதகுல விரோத தகவல் களைத் தொடர்ந்து அவர்கள் தங்களது வக்கிரப் புத்தி கலந்த பயங்கரவாதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


மாலேகானில் நோன்புப் பெரு நாளுக்கு முந்தைய நாள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆண்டின் கடைசி நோன்பினைத் துறக்கும் வேளையில் குண்டுவைத்து கொலை செய்த பாதகங்களில் முக்கியமானவர்களாக, பெண் சாமியார் பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர், மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு ராணுவ அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


நாசிக்கில் உள்ள போன்சலா ராணுவ பயிற்சிக் கூடத்தில் குண்டுகள் வைப் பதற்கும் அப்பாவி முஸ்லிம்களை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்தும் சதி பயிற்சிகள் நடைபெற்று வந்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை கூறிவரும் நிலையில் அந்த பயங்கர வாதிகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அரவணைக்க வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா வில் தலையங்கத்தில் பயங்கரவாதத் திற்கு பால் வார்க்கும் விதமாக விஷமக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பயங்கரவாதி பிரக்யாசிங் உள்ளிட்ட வகையறாக்களை யாரும் கைவிட்டு விடக் கூடாது என்றும், அவர்களின் செயல் குறித்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் பால்தாக்கரே. அதோடு பொதுநிதி கொடுத்து அந்த பயங்கர வாதிகளை வாழவைக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே கூறியுள்ளார். அவர்களை நிதி கொடுத்து காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்.ஸும் வாக்குறுதி கொடுத் தது. இதையெல்லாம் குறிப்பிட்டு, இதில் தவறு ஒன்றும் இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் தெரிவித்திருக்கிறார்.


இவர்கள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாத தடுப்புப் படையின் கட்டுப் பாட்டில்தான். என்ன செய்கிறது மத்திய அரசு

Tuesday, November 4, 2008

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...











இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

-பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்






அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடா தவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.


இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:


“துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.


இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்பு களும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரி னால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னி கரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால் கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளி வாக வெளிப்படுத்துகின்றது.


“மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு வருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக் காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள். அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்ல வனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர் கள் தோற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?


நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற் கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்து வத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்.




மதமாற்றம் பற்றி...


தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத் தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா வில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டு மெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.


“இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல. வறுமை, எழுத் தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய் வது நமது கடமையாகும்’’.


சாதியத்தை போற்றும் கோல்வால்கர்


இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக் களில் இந்துத்துவத்தின் பிதாம கன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள் ளார். அவர் எழுதுகிறார்:


பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள் ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமை யையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.


திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத் தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல் வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது. இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத் தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்பு ணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும். ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்து வம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.


சங்பரிவாரின் அமைப்பு முறை


பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது. பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன. இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.


சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தின ருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.


அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன் றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார் கள். ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த் தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.


ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.


சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.


பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.


பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன


1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)
9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15. சிக்கா பாரதி (21 லட்சம்)
16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21. வனவாசி கல்யாண் ஆசிரம்
22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24. சங்கல்ப்
25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)
26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)
27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)
29. சேவா பாரதி
30 பாரதீய விசார் கேந்திர்


சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரை யும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின் றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.



Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.

Sunday, November 2, 2008

பத்திரிகை அறிக்கை பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால்தாக்கரேவை கைது செய்க!தமுமுக கோரிக்கை!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை


நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தின் ஊது குழலாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கமாக தீட்டியுள்ள கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


மாலேகானில் அப்பாவி மக்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தற்போது தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகள் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ரமேஷ் உபாத்யாய், சரத், குல்கர்னி மற்றும் தற்போது ராணுவத்தில் பணியிலிருக்கும் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் குற்ற செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தட்டிக் கொடுக்கும் விதமாக பால்தாக்கரே தனது விஷமக் கருத்தை விதைத்திருக்கிறார்.


பெண் சாமியார் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹிந்து இயக்கங்கள் பெண்சாமியார் பிரக்யாசிங்கை கைவிட்டு விட்டன என்று எழுதியதோடு கூறுவதோடு அந்த பயங்கரவாதிகள் செய்யும் செயலை நினைத்து பெருமைப்படுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். அப்பாவிகள் கொலை செய்யப்படுவதும், வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி அளிப்பதற்கு பெருமைப் படுவதோடு அதை பகிரங்கமாக அறிவித்து இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதும் அமைதி விரும்பும் அனைத்து இந்திய மக்களின் மீதும் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார் பால்தாக்கரே.


தீவிரவாதத் தடுப்புப் படை மற்றும் மகாராஷ்ட்ர மாநில அரசுடன் மட்டுமல்ல மத்திய அரசும் தலையிட்டு இவ்விஷயத்தில் தேசத்திற்கு விரோதமாக, பிரச்சாரம் செய்யும் பால்தாக்கரேயை, பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால் தாக்கரேயை உடனடியாகக் கைது செய்து பயங்கரவாதத்திற்கு உடந்தையான சக்திகளை ஒடுக்க வேண்டும்.