
ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம் மத பயங்கரவாதத்தின் கொடு மைக்கு இலக்கானது. ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 6 பேர் (இரண்டு வயது குழந்தை உள்பட) உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.
பைன்சா நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் வடோலி என்ற கிராமத்தில் இந்தக் கொடுமை நிகழ்ந்தது.
மஹ்மூத் கான் தையல் தொழி லாளி யான இவர் மனைவி சஃபியா பேகம், தனது மகள், ரிஸ்வானா மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளான நுஃமான், அர்சலான், துபாஃபலக் என்ற இரண்டரை வயது குழந்தை உள்பட ஆறுபேரும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதிகாலை மூன்று மணியளவில் அந்தப் பகுதியில் நுழைந்த வெறிக் கும்பல் டெய்லர் மஹ்மூத் கானின் வீட்டை வெளிப்புறமாக பூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளது.
மத சிலை ஊர்வலத்தை வைத்து பெரும் கலவரத்தை உருவாக்கிய சக்தி கள் பெரும் வன்முறையை திட்டமிட்டு அரங்கேற்றின. வடோலி கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் உயிருக்கு அஞ்சி பைன்சா பகுதிக்கு சென்றனர். வெள்ளிக் கிழமை 30 குடும்பதினர் தப்பிச் சென்ற போதிலும் டெய்லர் மஹ்மூத் கான் குடும்பத்தினர் மட்டும் பைன்சா செல்லவில்லை. வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு இலக்காகி விட்டனர். துர்கா சிலை ஊர்வலம் தொடர்பாக வெடித்த கலவரத்தில் முதலில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பைன்சா பகுதியில் பிறப்பிக்கப் பட்டிருந்தாலும் கூட நிர்மல் மற்றும் அடிலாபாத் நகரங்களுக்கும் கலவரம் பரவியது.
மாநில உள்துறை அமைச்சர் கே.ஜனா ரெட்டி மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.எஸ்.பி யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் மஜ்லீஸெ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி சம்பவ இடத்திற்கு வந்து அங்கு வந்தி ருந்த மாநில அமைச்சர் ஜனாரெட்டியிடம் நேரிடையான தனது கண்டனத்தை தெரிவித்தார். சிறுபான்மை சமூகத்தின ருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் மாநில அரசு படு தோல்வி அடைந்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
நடைபெற்ற படுகொலைகளுக்கு தேசத் துரோக ஆர்.எஸ்.எஸ் இயக்கமே முக்கிய காரணம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
தசரா ஊர்வலத்தில் வன்முறை வெறி யாட்டம் நடத்தி கடந்த 48 மணிநேரத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த சமூக விரோதக் கூட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாக கொல்கத்தாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு குறிப்பிட்டுள்ளது.
நடைபெற்ற கலவரத்திற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீவைத்து கொல்லப் பட்டதற்கும் சிபிஜ விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்றும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிக்காமல் உள்துறை அமைச்சர் தனது வீட்டிற்கு செல்ல முடியாது என அசதுத்தீன் எச்சரிக்கை விடுத்தார்.
வடோலி மற்றும் பைன்சா பகுதிக்கு உடனடியாக வந்த தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில காவல்துறை முழுமையாக செயலிழந்து விட்டது என குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உறவு களை பறிகொடுத்தவர்களுக்கும் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிகழ்வுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும் (அப்படி போடு!) என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
அப்பாவி மக்களின் ரத்தங்களை குடிப்பவர்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுத்ததே இந்த கொடும் செயலுக்கு காரணமாக அமைந்து விட்டது.
1 comment:
Feel good......
Post a Comment